துருக்கிக்கு குடியேறிகளை திருப்பி அனுப்பும் ஐரோப்பிய ஒன்றியம்

பிரசுரிக்கப்பட்டது

கிரேக்கத்திலிருந்து திருப்பியனுப்பப்படும் குடியேறிகளின் முதல் தொகுதி படகுகள் திங்களன்று துருக்கிக்கு சென்று சேர்ந்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய புதிய ஒப்பந்தத்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளாமல் தடுக்கும் நோக்கத்தில் இதை செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

ஆனால் அகதிகளுக்கான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதை விமர்சித்துள்ளனர்.

ஐரோப்பாவுக்குள் அகதி தஞ்சம் கோராதவர்கள் அல்லது கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களே துருக்கிக்கு இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.