இஸ்லாமிய அரசு கையிலும் இரசாயன ஆயுதங்கள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
இராக்கிலும் சிரியாவிலும், இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்பவர்கள், இரசாயன ஆயுதங்களை அவர்களாகவே தயாரித்து பயன்படுத்துவதாக, அமெரிக்க அரசாங்கம் நம்புகின்றது.
இராக் மற்றும் சிரியாவின் எல்லைகளின் இருபக்கங்களிலும் இஸ்லாமிய அரசு இரசாயன ஆயுதங்களை நான்கு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசிக்கு கூறியுள்ளார்.
இந்த கூற்றை வலுப்படுத்தும் ஆதாரங்களை துருக்கி - சிரியா எல்லையில் உள்ள ஒரு பிபிசி குழு பார்த்தது. இவை குறித்த ஒரு காணொளி.
இந்த செய்திக்குறிப்பில் வரும் காட்சிகள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம்.