கியூபா மாறினாலும் அதன் அரச பத்திரிகை ''கிரான்மா'' மாறவில்லை- காணொளி

பிரசுரிக்கப்பட்டது

கியூபாவில் பெரிய மாற்றங்கள் நடக்கின்றன. ஹவானாவில் அமெரிக்க தூதரகம் திரும்ப திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான பல தசாப்த பகையுணர்வு படிப்படியாக குறைகிறது.

ஆனால், அங்கு மாறாத ஒன்று ''கிரான்மா''. கிரான்மா என்றால் ஒன்றும் பாட்டியல்ல. கியூப அரசாங்கத்தின் அரச ஊடகம் அது.

பனிப்போர் காலகட்டத்தின் உச்சத்தில் பீடல் காஷ்ட்ரோவின் புரட்சிகர அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் கிரான்மா பத்திரிகை தனது பாணியை மாற்றிக்கொள்ளவில்லை.

21 ஆம் நூற்றாண்டின் ஊடக உலகில் அது எப்படி தாக்குப் பிடிக்கிறது?

அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் செல்ல பிபிசிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. இவை குறித்த பிபிசியின்ஒரு காணொளி.