மலேரியா ஒழிப்பில் சுணக்கம்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 டிசம்பர், 2012 - 15:26 ஜிஎம்டி

மலேரியா கொசுக் கடிகளாலேயே ஏற்படுகிறது

மலேரியா ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் தற்போது ஒரு சுணக்கம் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்த நோய் ஒழிப்பில் அண்மைக் காலங்களில் கிடைத்த அனுகூலங்கள், பலனற்றுப் போயிவிடக் கூடும் எனவும் அது எச்சரித்துள்ளது.

மலேரியா நோயைத் தடுப்பதற்கும் அதனைக் கண்டறிவதற்கும் வைத்தியம் செய்வதற்குமான நிதிக் கையிருப்புக்கும் தேவைப்படும் நிதிக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

"கூடுதல் நிதி தேவை"

கொசு வலை வாங்கவும் நிதி தேவைப்படுகிறது

உதாரணத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்கவில் கொசு வலை விநியோகிக்கப்படுவது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாதிக்கும் குறைவான அளவுக்கு குறைந்துள்ளது என்றும், அதன் காரணமாக பல லட்சம் மக்கள் மலேரியா நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மலேரியா ஒழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை இன்னும் துரிதமாக முன்னெடுத்துச் செல்ல தமக்கு மேலதிகமாக மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்றும், அதற்காக புதிய வழிகளில் நிதியாதாரங்களை பெருக்கும் வழிகளை தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக நிதி பரிவர்த்தனைகள் மீது வரி விதித்தல் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.