ஆப்கானிய படைத்தளத்தில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 2 டிசம்பர், 2012 - 11:10 ஜிஎம்டி
சம்பவ இடத்தில் சிப்பாய்கள்

நேட்டோ தரப்பு சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை

ஆப்கானிஸ்தானின் கிழக்கே விமானப் படைத்தளம் ஒன்றில் தாலிபான் தற்கொலை குண்டுதாரிகள் நடத்தியுள்ள ஒரு தாக்குதலில் ஆப்கானிய சிப்பாய்கள் நான்கு பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் நேட்டோ துருப்பினர் காயமடைந்தும் இருக்கின்றனர்.

இத்தாக்குதலில் பொதுமக்கள் இரண்டு பேரும் உயிரிழந்ததாக உள்ளூர் பொலிசார் கூறுகின்றனர்.

தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஒன்பது பேருமே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜலாலாபாத் நகருகேயுள்ள அமெரிக்க மற்றும் ஆப்கானிய கூட்டுப் படைத் தளத்தின் பல்வேறு வாயில்களுக்கும் வெடிப்பொருட்கள் நிரப்பட்ட வாகனங்கள் ஓட்டிவரப்பட்டிருந்தன.

மோர்டார் மற்றும் ராக்கெட் குண்டுகளும் படைத்தளத்துக்குள் வீசப்பட்டிருந்தன.

ஆனால் படைத்தளத்துக்குள் நுழைந்து அழிப்பது என்ற தாலிபான்களின் திட்டம் தோல்வியடைந்துள்ளது என நேட்டோ படையணி கூறூகிறது.

திட்டமிடப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு, பல்வேறு வழிகளிலுமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் முயற்சியாக இது தெரிகிறது என காபுலில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

கடந்த பிப்ரவரியில் இதே படைத்தளத்தில் தாலிபான் தற்கொலை குண்டுதாரி ஒருவர் ஒன்பது ஆப்கானியரைக் கொன்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.