சிறார் பாலியல் துஷ்பிரயோகம்: அமெரிக்க சாரணர் இயக்கம் தகவல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 அக்டோபர், 2012 - 10:29 ஜிஎம்டி
அமெரிக்க சாரணர் இயக்கத்தில் பள்ளி மாணவர்கள்

அமெரிக்காவில் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் நிறைய சம்பவங்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை பாய் ஸ்கௌட்ஸ் ஒஃப் அமெரிக்கா என்ற சாரணர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

சாரணர் அமைப்பின் தலைவர்கள், பொலிசார், சட்ட நடவடிக்கை அதிகாரிகள், நகரத் தந்தைகள் போன்றோர் சிறார் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக எழுந்த ஏராளமான குற்றச்சாட்டுகளை வெளியே பேசமால் எவ்வாறு மூடி மறைத்தனர் என்று காட்டும் கிட்டத்தட்ட பதினையாயிரம் பங்கங்களைக் கொண்ட ஆவணத் தொகுதி ஒன்றை அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

சிறார்களை இப்படியான துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்க தங்களால் ஆன அனைத்தையும் செய்ததாக பாய் ஸ்கௌட்ஸ் ஒஃப் அமெரிக்கா கூறுகிறது.

ஒரெகான் மாகாண உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு நெடிய வழக்கு விசாரணையின் பின்னர், இந்த ஆவணத் தொகுதி வெளியிடப்பட வேண்டும் என்று அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது வெளியான ஆவணத் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஏற்கனவே தெரியவந்தவைதான் என்றாலும், 1959 -1971 இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சிறார் பாலியல் துஷ்பிரயோகச் குற்றச்சாட்டுகள் வெளியே வருவதென்பது இதுவே முதல்முறை.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.