
எரியும் அமெரிக்கத் தூதரகக் கட்டடம்
பென்காஸியில் நேற்றிவு அமெரி்க்கத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் கொல்லப்பட்டதாக லிபிய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து ஏற்பட்ட புகை மண்டலத்தில் மூச்சுத்திணறி அமெரிக்கத் தூதர் இறந்துவிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அந்தச் சம்பவத்தில் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ள அமெரிக்கா, இதுவரை அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
ராக்கெட் மூலம் செலுத்தக்கூடிய குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிதாரிகள் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்தக் கட்டடம் தீப் பிடித்தது.
இஸ்லாம் தொடர்பாக, அமெரிக்கர் ஒருவர் தயாரித்த குறும்படம், முகமது நபிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கண்டனம் தெரிவித்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.







