மரணத்தின் பிடியில் சிரியா மக்கள்!
பிரசுரிக்கப்பட்டது
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் குண்டுமழை பொழிவு நிற்காத நிலையில், அங்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற டிரக்குகள் நிவாரண உதவிகளை விநியோகிக்கத் தொடங்கின. கிளர்ச்சியாளர்கள் உள்ள கிழக்கு கூட்டாவில் நான்கு லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளார்கள். இதனால் வாரக்கணக்கில் அவர்களுக்கு உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், அங்கு திட்டமிட்டபடி மருந்துப் பொருட்களை வழங்க முடியவில்லை என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.